உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமன் பக்த சபா சார்பில் புத்தகம் வழங்கும் விழா

அனுமன் பக்த சபா சார்பில் புத்தகம் வழங்கும் விழா

வேலூர்: வேலூரில், ஸ்ரீராமஜெயம் எழுத, 10 ஆயிரம் பேருக்கு புத்தகம் வழங்கும் விழா நடந்தது. தமிழ்நாடு அனுமன் பக்த சபா சார்பில், 108 முறை ஸ்ரீராமஜெயம் எழுத, 10 ஆயிரம் பேருக்கு இலவசமாக புத்தகம் வழங்கும் விழா, வேலூரில் நேற்று நடந்தது. அனுமன் சபா தலைவர் பழனி தலைமை வகித்தார். கவுரவ தலைவர் பாலாஜி, 10 ஆயிரம் பேருக்கு புத்தகத்தை வழங்கினார். விழாவில், சபா நிர்வாகிகள் தண்டபாணி, செந்தில்குமார், குமரவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !