சீனிவாச பெருமாள் கோவில் சிறப்பு குத்துவிளக்கு பூஜை
ADDED :3333 days ago
கோம்புபாளையம்: கரூர் மாவட்டம், கோம்புபாளையம் சீனிவாச பெருமாள் கோவிலில் குத்துவிளக்கு பூஜையும், அபிஷேக ஆராதனையும் நடந்தது.
இங்கு, பெண்கள் வாழை இலையின் மேல் பூக்கள் மற்றும் மஞ்சள், குங்குமம் வைத்து குத்துவிளக்கு தீபம் ஏற்றி சுவாமியை வழிபட்டனர். பின், பூமிதேவி, நீலாதேவி, சீனிவாச பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.