உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரி விழா வருகை எதிரொலி கொலு பொம்மை விற்பனை "ஜோர்

நவராத்திரி விழா வருகை எதிரொலி கொலு பொம்மை விற்பனை "ஜோர்

பழநி: நவராத்திரி விழாவை முன்னிட்டு பழநி பகுதியில் கொலு பொம்மைகள் விற்பனை அதிகரித்துள்ளது.

ஆண்டுதோறும் நவராத்திரிவிழா நடக்கும் ஒன்பது நாட்களிலும் வீடுகள், கோயில்கள், நிறுவனங்கள், மண்டபங்களில், கொலு பொம்மைகள் அடுக்கி வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். இவ்வாண்டு அக்.,1 முதல் அக்.,11 வரை நவராத்திரி விழா நடக்கிறது. இந்நாட்களில் கொலு அமைத்து, அதில் வைப்பதற்கான பொம்மைகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

பழநி சன்னதிவீதி வியாபாரி நாகராஜன் கூறியதாவது: நவராத்திரி கொலுவில் வைக்கப்படும் சுவாமிபொம்மைகள், 18 சித்தர்கள், புராண கதை நாயகர்கள் உட்பட பல்வேறு பொம்மைகளை, காஞ்சிபுரத்தில் இருந்து வாங்கி வருகிறோம். துாணிலிருந்து நரசிம்மர் வெளிப்படுவது, காதணிவிழா கொண்டாட்டம், அகத்தியர், கிரகலட்சுமி, பிரதோஷ சிவன் வழிபாடு, காளிங்க நர்த்தனம், கரகாட்டக்குழு, கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் என ரூ.100 முதல் 3500 வரை தனித்தனி பொம்மை களாகவும், குழுவாகவும் உள்ளன. இவ்வாண்டு புதிய வரவான கார்த்திகை பெண்கள், மதுரை மீனாட்சி தேரோட்டம் விலை ரூ.3,300க்கு விற்கிறது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !