திருவள்ளூர் ஜலநாராயணருக்கு அபிஷேகம்
ADDED :3395 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர், சிவவிஷ்ணு கோவிலில், ஏகாதசியை முன்னிட்டு, ஜலநாராயணருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திருவள்ளூர், சிவவிஷ்ணு கோவிலில், ஜலநாராயணி சமேத ஜலநாராயணர் சன்னிதி உள்ளது. நேபாளத்தில் அமைந்துள்ள ஜலநாராயணர் சன்னிதி போல் இங்கு அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு அம்சம். இங்கு ஒவ்வொரு ஏகாதசி அன்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. நேற்று, ஏகாதசியை முன்னிட்டு, ஜலநாராயணருக்கு காலை, 9:30 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் துவங்கி, காலை 11:00 மணி வரை நடந்தது. பின், மகா தீபாராதனை நடந்தது. புரட்டாசி மாத ஏகாதசி என்பதால், பக்தர்கள் அதிகளவில் சிவ விஷ்ணு கோவிலுக்கு வந்து ஜலநாராயணரை வழிபட்டனர்.