உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் விரைவு தரிசனம் திடீர் ரத்து

திருமலையில் விரைவு தரிசனம் திடீர் ரத்து

திருப்பதி: திருமலையில், 300 ரூபாய் விரைவு தரிசனத்தை, தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. திருமலையில், பிரம்மோற்சவத்தின் போது, அக்., 7 இரவு, கருடசேவை நடக்க உள்ளது. அதை காண திருமலைக்கு, ஐந்து லட்சம் பக்தர்கள் வரை வருவர். அதனால், அக்., 7 மற்றும் புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமையான, அக்., 8 என, இரு நாட்களிலும், 300 ரூபாய் விரைவு தரிசனத்தை, தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. மேலும், பிரம்மோற்சவ நாட்களில், குறைந்த அளவே, விரைவு தரிசன டிக்கெட் வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !