உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி சிறப்பு பூஜை

அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி சிறப்பு பூஜை

ஆலங்குடி : புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியா நிலையில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாத சிறப்பு பூஜை நடந்தது. அழியா நிலையில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் கடந்த 24ம் தேதி காலை ஆறு மணிக்கு சுதர்சன ஹோமம், காலை 10 மணிக்கு சிறப்பு பூஜைகளும், மாலை ஆறு மணிக்கு மஞ்சள் காப்பு, வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அழியா நிலை ஆஞ்சநேயர் கோவில், வேண்டிய காரியங்கள் நேர்த்தி கடன்கள், கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறுவதாகவும், இக்கோயிலுக்கு பல ஊர்களிலிருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இதில் ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் இங்கு சிறப்பு பூஜைகள் மிகவும் கோலாகலமாக நடக்கும். அதேபோல தற்போது நடந்த பூஜைகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை விஸ்வரூப ஆஞ்சநேயர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !