தெரசம்மாள் ஆலயத்தில் கொடியேற்றம் கோலாகலம்
கரூர்: கரூர் புனித தெரசம்மாள் ஆலயத்தில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்று விழா வெகுசிறப்பாக நடந்தது. தெரசம்மாள் ஆலயத்தில் 81 வது தேர்த்திருவிழா வரும் 9ம் தேதி நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு ஆலயத்தில் சிறப்பு ஜெபக்கூட்டம் நடந்தது. பின்னர் கூட்டுப்பாடற் திருப்பலி கொடியை அருட்தந்தை ஜோசப் பிரகாசம் ஏற்றி வைத்தார். புலியூர் அருட்தந்தை ஜாய், பசுபதிபாளையம் அருட்தந்தை ஹென்றி உள்பட பலர் பங்கேற்றனர். நாளை (2ம் தேதி) மாலை 4.30 மணிக்கு குடும்ப விழா போட்டிகளும், 7ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை அருட்தந்தை ஜான்பிரிட்டோ தலைமையில் ஒரு நாள் தியானம் நடக்கிறது. வரும் 9 ம் தேதி தேர்த்திருவிழா காலை 6 மணிக்கு திருப்பலி நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. 8.15 மணிக்கு கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் கூட்டுபாடற் திருப்பலி, 10 மணிக்கு வேண்டுதல் தேர் பவனி, இரவு 7 மணிக்கு அலங்கார தேர்பவனி, 8.30 மணிக்கு திவ்ய நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. 10 ம் தேதி காலை 6 மணிக்கு நன்றி திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை அருட்தந்தைகள் கென்னடி, ஞானபிரகாசம் மற்றும் கரூர் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.