உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீமத் அழகிய சிங்கர் புதுச்சேரியில் நாளை அருளாசி

ஸ்ரீமத் அழகிய சிங்கர் புதுச்சேரியில் நாளை அருளாசி

புதுச்சேரி: ஸ்ரீமத் அழகிய சிங்கர் நாளை (30ம் தேதி)  புதுச்சேரிக்கு வருகை புரிந்து, அருளாசி வழங்குகிறார். புதுச்சேரி ராமகிருஷ்ணா நகரில் அமைந்துள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், நாளை (30ம் தேதி) மாலை 4:00 மணிக்கு, ஸ்ரீமத் அகோபில மடம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் வருகை புரிகிறார். அவருக்கு, பூரணகும்ப மரியாதை மற்றும் ஸ்ரீசடாரி மரியாதை அளிக்கப்படுகிறது. மாலை 4:30 மணிக்கு லட்சுமி ஹயக்ரீவ பெருமாள்  தர்மாதி பீடத்தில் மங்களாசாசனம், ௫:00 மணிக்கு அகோபில மடத்தில் எழுந்தருளியுள்ள  ஸ்ரீ மாலோலன் டோலோத்சவம்,  5:30 மணிக்கு மங்கள ஆசீர்வாதம் நடக்கிறது. நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை, லட்சுமி ஹயக்ரீவர் பக்த ஜனசபா மற்றும் ஸ்ரீ லட்சுமி சரஸ் மாருதி டிரஸ்ட் நிர்வாகிகள், ஹயக்ரீவர் கோவில் தனி அதிகாரி உள்ளிட்டோர்  செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !