உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாளய அமாவாசை: மெரினா கடற்கரையில் ஏராளமானோர் தர்பணம் செய்து வழிபாடு!

மகாளய அமாவாசை: மெரினா கடற்கரையில் ஏராளமானோர் தர்பணம் செய்து வழிபாடு!

சென்னை: மகாளய அமாவாசயை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்து  வழிபட்டனர்.

பூலோகத்திற்கு தங்கள் பிள்ளைகளை பார்க்க வந்த முன்னோர் மீண்டும் பிதுர்லோகத்திற்கு இன்று திரும்புவதாக ஐதீகம். இந்நாளில் தீர்த்தக் கரைகளில் நீராடுவதும், பிதுர் வழிபாடு செய்து அவர்களை வழியனுப்பி வைப்பதும், குடும்பம் செல்வச்செழிப்புடன் வாழவும், வாழையடி வாழையாய் தழைக்கவும் உதவும். இறைவனடி சேர்ந்த மூதாதையர்களை மறக்காமல் அவர்களை நினைத்து மறியாதை செய்து வழிபடும் மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் பித்ருக்களுக்கு திதி செலுத்தி ஏராளமானோர் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !