ராஜகோபால சுவாமிக்கு நாளை திருமலை சீனுவாசன் அலங்காரம்
ADDED :3329 days ago
கடலுார்: புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில்,மூலவர் பெருமாள், நாளை திருமலை சீனுவாச பெருமாள் அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். கடலுார் புதுப்பாளையம் செங்கமலத் தாயார் சமேத ராஜகோபால சுவாமி கோவிலில், புரட்டாசி உற்சவம் நடந்து வருகிறது. நாளை (1ம் தேதி) மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு, மூலவர் ராஜகோபாலன், திருப்பதி சீனுவாச பெருமாள் அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர், செங்கமலத் தாயார், ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இரவு பூமிதேவி சகிதமாக ராஜகோபால சுவாமி கோவில் உள் புறப்பாடு நடக்கிறது. ஏற்பாடுகளை கிருஷ்ணமூர்த்தி பட்டாச்சாரியார், கோவில் நிர்வாக அதிகாரி முத்துலட்சுமி செய்து வருகின்றனர்.