புதுச்சேரி கோமாதா ஆலயத்தில் தர்ப்பணம் நிகழ்ச்சி
ADDED :3323 days ago
புதுச்சேரி: மகாளயபட்ச அமாவாசையை முன்னிட்டு, கருவடிக்குப்பம் கோமாதா ஆலயத்தில், முன்னோர்களுக்கான தர்ப்பணம் நிகழ்ச்சி செப்.,30ல் நடந்தது.
மகாளயபட்ச அமாவாசை முடிய உள்ள 15 நாட்களும் மகாளயபட்சம் புண்ணிய தினங்களாகும். இந்த 15 தினங்களும் நம் மீது அன்பும், பாசமும் காட்டி வளர்த்து, நமக்காக பல சுகங்களை தியாகம் செய்து மறைந்த, முன்னோர்களை நினைத்து வணங்க வேண்டிய நாட்களாகும். கடந்த 17ம் தேதி தொடங்கிய மகாளயபட்ச வழிபாடு, மகாளயபட்ச அமாவாசை தினமான செப்.,30 நிறைவடைந்தது. கருவடிக்குப்பம் கோமாதா ஆலயத்தில் செப்.,30 காலை தர்ப்பணம், பிண்டதானம், கோ பூஜை செய்து வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தர்ப்பணம் மற்றும் பசுவிற்கு கீரை வழங்கி வழிபட்டனர்.