உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம், நடராஜர் கோவிலில் நவராத்திரி விழா

சிதம்பரம், நடராஜர் கோவிலில் நவராத்திரி விழா

சிதம்பரம்: சிதம்பரம், நடராஜர் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி கொலு அமைத்து சிறப்பு பூஜை நடக்கிறது. இதனையொட்டி சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர், கோவில் கல்யாண மண்டபத்தில் 21 படிகள் அமைத்து 3,000 பொம்மைகளுடன்  கொலு வைக்கப்பட்டுள்ளது. இதில் கிரகப்பிரவேசம், திருமணங்கள், சமபந்தி போஜனம், கோவில் விழாக்கள் என பல்வேறு கருத்துக்கள் சொல்லும் கொலு அமைக்கப்பட்டுள்ளது.  கொலு மண்டபத்தில் சிவகாம சுந்தரி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் மாலை சிறப்பு பூஜை நடைபெறுவதுடன், ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. வரும் 10ம் தேதி வரை கொலு உற்சவம் நடக்கிறது. நவராத்திரி உற்சவம் 9 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு 10 நாட்கள் நடைபெறுவது சிறப்பு. விருத்தாசலம்:விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விருத்தாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அம்மன் சன்னதியில் படி அமைத்து, விஷ்ணு, சிவன், நந்தி, மகாலட்சுமி, சரஸ்வதி, பெருமாள், முருகர், விநாயகர், குபேரன் உள்ளிட்ட ஏராளமான பொம்மைகள் கொலு வைத்து அலங்கரித்திருந்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிரார்த்தனைக்காக பொம்மைகளை வாங்கி வந்து, கொலுவில் வைத்து, வழிபட்டுச் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !