உடுமலை வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா கோலாகலம்
ADDED :3307 days ago
உடுமலை: உடுமலை அருகே பெரியவாளவாடியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் திருவீதி உலா உற்சவ வைபவம் நடந்து வருகிறது. திருமூர்த்திமலையில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தன. பின்பு சுதர்ஷன யாகம், சோடஷ அபிேஷக ஆராதனை மற்றும் பஜனை குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. பெருமாளுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடத்தினர். தொடர்ந்து, நாதஸ்வர இன்னிசையுடன் வரதராஜ பெருமாள் திருவீதி உலா புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.