பரமசிவன் கோவிலில் கும்பாபிஷேக விழா
ADDED :12 hours ago
அன்னுார்: குளத்துப்பாளையம் பரமசிவன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடத்தப்பட்டது.
பொகலுார் அருகே, குளத்துப்பாளையம் பரமசிவன் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழா, கடந்த 20ம் தேதி காலை மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலையில் முதற்கால வேள்வி பூஜை நடந்தது.கடந்த 21ம் தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம் கால வேள்வி பூஜைகள் நடந்தன. நேற்று காலை 8:30 மணிக்கு பரமசிவனுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது.
சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடத்தப்படும் என, விழா குழுவினர் தெரிவித்தனர்.