உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தான் ஜெனகநாராயணபெருமாள் கோயிலில் சுவாமி பவனி

சோழவந்தான் ஜெனகநாராயணபெருமாள் கோயிலில் சுவாமி பவனி

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகநாராயணபெருமாள் கோயிலில் சனிபுரட்டாசி உற்சவத்தில் கருடாழ்வார் வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். இக்கோயிலில் புரட்டாசி மாத உற்சவம் நடக்கிறது. நேற்று முன்தினம் சனிபுரட்டாசியை ஒட்டி மூலவர் தேவி, பூதேவியர் ஜெனகநாராயணப்பெருமாள் சுவாமிக்கு ரகுராமர் பல்வேறு அபிஷேக, தீபாராதனைகள் செய்தார். இரவு 10 மணிக்கு மேல் சுவாமி கருடாழ்வார்வாகனத்தில் வீதியில் எழுந்தருள, பக்தர்கள் தரிசித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி லதா, தலைமைகணக்கர் பூபதி செய்திருந்தனர்.





தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !