கன்னியாகுமரி காந்திமண்டப அஸ்திபீடத்தில் சூரியஒளி!
நாகர்கோவில்:காந்தி ஜெயந்தியன்று கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் அவரது அஸ்தி கலசம் வைக்கப்பட்ட இடத்தில் விழுந்த சூரிய ஒளியை ஏராளமானோர் கண்டு அஞ்சலி செலுத்தி திரும்பினர்.காந்தியடிகளின் அஸ்தி 1948-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ம் தேதி கன்னியாகுமரி கடலில் கரைக்கப் பட்டது. அஸ்தி வைக்கப்பட்ட இடத் தில் அவரது நினைவாகமண்டபம் 79 அடி உயரத்தில் கட்டப்பட்டு 1956-ம் ஆண்டு திறக்கப்பட்டது. எல்லா காந்தி ஜெயந்தி நாளிலும் பகல் 12 மணிக்கு அவரது அஸ்தி கலசம் வைக்கப்பட்ட இடத்தில் சூரிய ஒளி விழும் வகையில் இந்த மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நேற்று 11:50 மணிக்கு துவாரம் வழியாக மண்டபத்துக்குள் வந்த சூரிய ஒளி மெதுவாக நகர்ந்து 12:00 மணிக்கு அஸ்திபீடத்தில் விழுந்தது. அப்போது அங்கு கூடி நின்ற மக்கள் ரகுபதி ராகவ ராஜாராம் பாடலை பாடி அவருக்கு அஞ்சலி செலுத்தினர். கலெக்டர் சஜ்ஜனன்சிங்சவான், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், வைகோ, மேதா பட்கர் உள்ளிட்டோர் அஸ்தி பீடத்தில் மலரஞ்சலி செலுத்தினர். முன்னதாக ராட்டையில் நுால்நுாற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.