புனித மிக்கேல் ஆலயத்தில் கொடியேற்று விழா
ADDED :3398 days ago
அம்மாபேட்டை: அழகாபுரத்தில் உள்ள, புனித மிக்கேல் ஆலயத்தில், நேற்று கொடியேற்று விழா நடந்தது. சேலம், அழகாபுரத்தில் உள்ள, புனித மிக்கேல் ஆலய திருவிழா, நேற்று துவங்கி, 9ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, நேற்று காலை, 9:00 மணிக்கு, கொடியேற்று விழா நடந்தது. கொடியை, மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஏற்றிவைத்தார். பின், அவர் மக்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினார். இதில், பங்குத்தந்தை கிறிஸ்துராஜ் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இன்று துவங்கி, 8ம் தேதி வரை, சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. வரும், 9ம் தேதி தேர் மந்திரிப்பு விழா நடக்கிறது.