நவராத்திரி நான்காம் நாள் எவ்வாறு வழிபட வேண்டும்?
மதுரை: இன்று (அக்.5) மதுரை மீனாட்சியம்மன் தபசுக்காட்சி (தவமிருத்தல்) அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள். சங்கன் என்னும் அரசன் சிவன் மீதும், பதுமன் என்ற அரசன் திருமால் மீதும் பக்தி கொண்டிருந்தனர். இவர்களுக்குள் சிவன் பெரியவரா, திருமால் பெரியவரா என்ற வாதம் எழுந்தது. தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர். இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை உணர்த்த, பூலோகம் வந்த அம்பிகை ஒற்றைக் காலை ஊன்றி, சிவனும், திருமாலும் இணைந்திருக்கும் வடிவத்தைக் காட்டும்படி தவமிருந்தாள். அவர்களும் இணைந்து சங்கரநாராயணராக தோன்றினர். சிவனுக்குரிய வலப்பாகத்தில் கங்கை, பிறை, அக்னி, மழு, ருத்ராட்சம் தாங்கியும், திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், லட்சுமி மாலை, சங்கு தாங்கியும் இருந்தனர். இக்கோலத்தை தரிசித்தால் மனவலிமை அதிகரிக்கும்.
நைவேத்யம்: அவல், கேசரி, பால் பாயாசம், கல்கண்டு சாதம்,
பாட வேண்டிய பாடல்
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த்தாள் எழுதா மறையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே.