கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் குருபூசை விழா!
மதுரை: மதுரை மாநகர் திருப்பரங்கிரியின் வடகிழக்கில் சிறு குன்றாய் விளங்கும் திருக்கூடல்மலை (புசுண்டர்மலை) அடிவாரத்தில் அமைந்துள்ள, அருள்மிகு சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமிகள், அருள்மிகு சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமிகள் வழியில் அவதரித்த அருள்மிகு கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதி 86வது ஆண்டு குருபூஜை விழா 6.10.2016 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மேல் 12.00 மணிக்குள் வெகு சிறப்பாக நடைபெறும். அன்றிரவு நடைபெறவுள்ள திருவுருவப் படப் பூப்பல்லக்கு திருவீதிவுலாவும், பக்திப் பாடல் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி நிரல்:
5.10.2016 (புதன்)
இரவு: 7.00 மணி- பக்தி இன்னிசை கலைமாமணி திரு. ஏ.எம். பேச்சிமுத்துப் பிள்ளை அவர்களின் பேரன் திரு. எஸ்.வி. கண்ணன் அவர்களின் ஜெயபல்லவி இசைக்குழுவினர்
இரவு: 10.00 மணி- கட்டிக்குளம் பாதயாத்திரை குருநாதர் தவத்திரு. கந்தராசு சுவாமிகள் குழுவினர், கட்டிக்குளம் கிராம பொது மக்கள் சார்பாக, திருக்கூடல்மலை திரு.வி.பி. திரவியம் மற்றும் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கக் குழுவினர் வழங்கும் சத்தியவான் சாவித்திரி என்ற பக்தி பரவசமூட்டும் புராண நாடகம் நடைபெறும்.
6.10.2016 (வியாழன்)
காலை: 8.00 மணி- யாகசாலை பூஜை
காலை: 10.30-12.00 மணிக்குள்- அபிசேகம்- சிறப்பு வழிபாடு
மாலை: 6.00 மணி- திருவிளக்கு வழிபாடு நாட்டரசன்கோட்டை தெய்வத்திரு. சிகப்பி ஆச்சி குடும்பத்தார்கள் தெய்வத்திரு சடையாச்சி குடும்பத்தார்கள்
இரவு: 7.00 மணி- ஆன்மீகச் சொற்பொழிவு
இரவு: 8.00 மணி- பூப்பல்லக்கில் சுவாமிகளின் திருவுருவப்பட வீதியுலா விளாச்சேரி வி. பெரியகருப்ப வேளார் வகையறா
இரவு: 8.15 மணி- பக்தி இன்னிசை வலங்கைமான் திரு.கே. தியாகராஜன் அவர்களின் குருப்பிரியா லயவித்யாலயா இசைக்கலைஞர்கள்
இரவு: 10.00 மணி- தமிழ்நாடு நாடக நடிகர் சங்க அருள்மிகு கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி பக்தர்கள் வழங்கும் பக்த பிரகலாதா எனும் பக்தி புராணம் நாடகம் நடைபெறும்.
தொடர்புக்கு: சூட்டுக்கோல் இராமலிங்க விலாசம்,
திருக்கூடல்மலை (புசுண்டர்மலை), திருப்பரங்குன்றம், மதுரை-625 005.
0452- 2484714, 94422 72220, 98421 24843