திருப்பதி பிரம்மோற்சவம் : பாசஞ்சர் ரயில் இயக்கம்
ADDED :3396 days ago
வேலுார்: திருப்பதி திருமலை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, அரக்கோணத்தில் இருந்து சிறப்பு பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. திருமலையில் நடந்து வரும், பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, அரக்கோணத்தில் இருந்து ரேணிகுண்டா வரை, சிறப்பு பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. வரும், 12ம் தேதி வரை இயக்கப்படும் இந்த ரயில், அரக்கோணத்திலிருந்து, தினமும் மதியம், 3:00 மணிக்கு புறப்படும். மாலை, 5:00 மணிக்கு, ரேணிகுண்டா சென்றடையும். அங்கிருந்து இரவு, 8:00 மணிக்கு புறப்பட்டு, 10:00 மணிக்கு அரக்கோணம் வந்தடையும்.