உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதல்வர் நலம் பெற மாணவர்கள் பிரார்த்தனை

முதல்வர் நலம் பெற மாணவர்கள் பிரார்த்தனை

மதுரை, :தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற, மதுரைக் கல்லுாரியில் இரண்டாயிரம் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மனம் உருகி நேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மதுரை கல்லுாரி வாரியம் சார்பில், இந்த சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் அமைச்சர் செல்லுார் ராஜூ தலைமை வகித்து பேசுகையில், "மக்கள் நலனுக்காக பல திட்டங்களை முதல்வர் செயல்படுத்தினார். ஏழை மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க லேப்டாப், கல்வி உதவி தொகை என பல திட்டங்களை கொண்டுவந்தார். பொது நலனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த அவர் விரைவில் குணமடைய வேண்டும்," என்றார். எம்.பி., கோபாலகிருஷ்ணன், மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், தியாகராஜர் கல்லுாரி செயலாளர் ஹரி தியாகராஜன், மதுரை கல்லுாரி வாரியத் தலைவர் ராமசுப்பிரமணியன், செயலாளர் நடனகோபால், இயக்குனர்கள் சீனிவாசன், ரமேஷ், ஆனந்த சீனிவாசன், முதல்வர்கள் சுரேஷ், ராஜசேகர், எம்.எல்.ஏ., சரவணன், மேயர் (பொறுப்பு) திரவியம், அவைத் தலைவர் துரைப்பாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !