கூடலூரில் மந்தையம்மன் கோயில் திருவிழா
ADDED :3332 days ago
கூடலுார்,மேலக்கூடலுார்மந்தையம்மன் கோயில் திருவிழாவைமுன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதிகாலையில் பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். கோலப்போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆண்களுக்கான பானை உடைத்தல், சைக்கிள்உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. கலை நிகழ்ச்சி நடந்தன. நுாற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். அதில் வரலாற்றுக் கதைகளை முன்வைத்து மாறுவேடம் அணிந்து வந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.