முதல்வர் குணமடைய வேண்டி வைத்தீஸ்வரன் கோயிலில் மிருத்தியஞ்சய ஹோமம்!
மயிலாடுதுறை: நாகை: வைத்தீஸ்வரன் கோயிலில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி தேனி மாவட்ட அதிமுகவினர் மிருத்தியஞ்சய ஹோமம் நடத்தி வழிபாடு செய்தனர்.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் தேவார பாடல் பெற்ற ஸ்ரீதையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ செ ல்வமுத்துக்குமார சுவாமி தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். மேலும் நவகிரகங்களில் செவ்வாய் தலமான இங்கு தேவலோக வைத்தியரும், பெருமாளின் அவதாரமுமான தன்வந் தரி சித்தர் ஜீவசமாதி அடைந்துள்ளார். அவரது கையில் அமிர்த கலசம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. இத்தலத்தில் சுவாமி, அம்பாள், செல்வமுத்துக்குமார சுவாமி மற்றும் தன்வந்தரி சி த்தரை சரணடைந்து, மனமுருக பிரார்த்தனை செய்தால் சகல நோய்களும் குணமாகி, நலமுநன் வாழ்வர் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் தேனி மாவட்ட அதிமுக. இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசரை சார்பில் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி வைத்தியநாத சுவாமி சன்னதியில் 5 கிலோ எடையி ல் செய்யப்பட்ட வலம்புரிசங்கு வைக்கப்பட்டு ருத்ர,ஆயுஷ்ய மற்றும் மிருத்தியஞ்சய ஹோமங்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு மகன்யாச ஏகாதச ருத்ராபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தேனி மாவட்ட பொருளாளர் ஜெரித்குமார் தலைமையில் நடைபெற்ற ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளை அய்யப்பன் குருக்கள் தலைமையில் 16 சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.