/
கோயில்கள் செய்திகள் / பழநி மலைக்கோவிலில் குவிந்த பக்தர்கள்: தரிசனம் செய்ய 3 மணி நேரம் காத்திருப்பு
பழநி மலைக்கோவிலில் குவிந்த பக்தர்கள்: தரிசனம் செய்ய 3 மணி நேரம் காத்திருப்பு
ADDED :3326 days ago
பழநி:தொடர் விடுமுறையால் பழநி மலைக்கோவிலில் குவிந்த பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய மூன்று மணி நேரம் காத்திருந்தனர். ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையால், நேற்று பழநி மலைக்கோவில் ஞானதண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய வழக்கத்தை விட அதிக பக்தர்கள் வந்தனர். மலைக்கோவிலில் பொது தரிசன வழியில், மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரோப்கார் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளதால், வின்ச் ஸ்டேஷனில், மூன்று மணிநேரம் பக்தர்கள் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர்.