கடப்பா என்றால் என்ன?
ADDED :3669 days ago
கடப்பா என்றால் முதல்படி அதாவது திருப்பதிக்கு முதல்படி. அங்கு தேவுனி கடப்பா என்ற இடத்தில் ஏழு மலையான் கோயில் உள்ளது. முற்காலத்தில் முதலில் இதைத் தரிசித்து விட்டுத்தான் திருப்பதி மலை ஏறுவர். மேலும் கடப்பா அருகே ஒன்டிமிட்டா ஊரில் பெரிய இராமர் கோயில் உள்ளது. ஒரே கல்லில் இராமர், இலக்குமணன், சீதை உள்ளனர். மிகப்பெரிய கோயில். ஆந்திர மாநிலம் பிரிவு ஏற்பட்ட பிறகு, இராமநவமி இங்குதான் கொண்டாடப்படுகிறது.