கீழராமநதி தர்ஹாவில் சந்தனக்கூடு விழா
ADDED :6 days ago
கமுதி: கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் கடந்த நூறாண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக மஹான் ஜிந்தா மதார் வலியுல்லாஹ் தர்ஹாவின் வருடாந்திர சந்தனக்கூடு விழா நடந்தது.இதனை முன்னிட்டு பள்ளிவாசலில் சந்தனக்கூடு துவா செய்து மின்விளக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.அப்போது நகர்வலம் வரும்போது கிராமத்தில் உள்ள ஏராளமானோர் தமிழர்களின் பாரம்பரியமான களிகம்பு நடனமாடி ஊர்வலமாக சென்றனர்.சந்தனக்கூடு தர்ஹா வந்தடைந்தது.பின்பு அனைத்து மதத்தினரும் மலர்கள் வைத்து வழிபட்டனர். விழாவில் சென்னை,மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து பலரும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை கீழராமநதி ஜும்ஆ பள்ளிவாசல் விழா கமிட்டியாளர்கள் செய்தனர்.