மடிசார் அலங்காரத்தில் லட்சுமி!
ADDED :3667 days ago
கர்நாடக மாநிலம், பெங்களூரு மகாலட்சுமி நகரில் உள்ள மகாலட்சுமி மந்திர் கோயிலில் அருள்பாலிக்கும் மகாலட்சுமி சுமார் பதினெட்டு அடி உயரத்தில் விஸ்வரூபமாகக் காட்சியளிக்கிறாள். மகாலட்சுமி அமர்ந்திருக்கும் தாமரை பீடம் மட்டும் ஐந்தடி உயரம். லட்சுமியின் திருவுருவம் மிகப் பெரியதாக இருப்பதால் ஐந்து புடைவைகளை இணைத்து, மடிசார் புடைவைகளை அலங்காரம் செய்திருப்பர். இதுபோல் மடிசார் அமைப்பில் லட்சுமியைக் காண்பது அரிது.