உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புஷ்ப கைங்கர்யம் செய்த புனிதர்கள்!

புஷ்ப கைங்கர்யம் செய்த புனிதர்கள்!

திருப்புகலூர் வர்த்தமா நீச்சரத்தில் முருக நாயனார் புஷ்ப கைங்கர்யம் செய்து மகிழ்ந்தார். திருப்பதி, வேங்கடாசலபதி கோயிலில் அனந்தாழ்வான் தன் மனைவியுடன் நந்தவனம் அமைத்து வேங்கடவனுக்கு புஷ்ப மாலைகள் சாத்திப் பரவசப்பட்டார். ஸ்ரீரங்கத்தில் விப்ரநாராயணர் நந்தவனம் அமைத்து புஷ்ப கைங்கர்யம் செய்வதையே இறைத் தொண்டாகக் கருதி இருந்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் அமைத்த நந்தவனத்தில் இருந்து ஸ்ரீரெங்கமன்னாருக்கு ஆண்டாள் மாலை தொடுத்து, சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாகத் திகழ்ந்தார். வியாக்ரபாத முனிவர் மலர்களில் வண்டுகளின் எச்சில் பட்டு விடுமோ என்று முன் இரவிலேயே பூக்களைப் பறித்து இறைவனுக்கு அர்ப்பணித்து ஆனந்தமடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !