உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு: அம்மன் அலங்கார காட்சி

காஞ்சிபுரம் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு: அம்மன் அலங்கார காட்சி

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில், விஜய தசமியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அம்மன் அலங்கார தத்ரூப காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. காஞ்சிபுரம் பிரம்மகுமாரிகள் இயக்கம் சார்பில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, ஒன்பது நாட்களும் பல்வேறு ஊர்களில் அம்மன் வேட அலங்கார காட்சிகள் நடைபெற்றன. நவராத்திரி கடைசி நாள் விழாவாக நேற்று முன்தினம் குமரகோட்டம் முருகன் கோவிலில் பிரம்ம குமாரிகள் இயக்கத்தை சேர்ந்த பெண்கள் பல விதமான தத்ரூப காட்சிகளை வெளிப்படுத்தினர்.

ஏலவார்குழலி: ஏலவார்குழலி அம்மன், சிவலிங்கத்தை கட்டி பிடிப்பது போன்றும், அருகில் முருகன், சரஸ்வதி, மகாலட்சுமி, காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி ஆகிய தோற்றங்களில் பலர் வீற்றிருப்பது போலவும், தத்ரூப காட்சிகள் இடம்பெற்றன. இந்த இயக்கத்தின் சார்பில் ஆனமிக சொற்பொழிவும், தியானத்தின் மூலம் கவலையை மறப்பது எப்படி என்றும் விளக்கமளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !