பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED :3397 days ago
இடைப்பாடி: வெள்ளார்நாயக்கன் பாளையத்தில், பசுபதீஸ்வரர் கோவிலில், சுவாமி திருக்கல்யாணம், நேற்று கோலாகலமாக நடந்தது. இடைப்பாடி அருகே, வெள்ளார்நாயக்கன் பாளையத்தில் உள்ள, பசுபதீஸ்வரர் கோவிலில், சுவாமிக்கு, ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில், திருக்கல்யாணம் நடைபெறும். அதன்படி, நேற்று, பசுபதீஸ்வரர் சுவாமிக்கும், வேதநாயகி அன்னைக்கும் திருமணம் நடந்தது. இதில், வெள்ளார்நாயக்கன் பாளையம், ஆவணியூர், இடைப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.