உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதல்வர் நலம் பெற வேண்டி 5001 பால்குடம் அபிஷேகம்

முதல்வர் நலம் பெற வேண்டி 5001 பால்குடம் அபிஷேகம்

வேலூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி, வேலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், 5001 பால்குடம் ஊர்வலம் நேற்று நடந்தது. வேலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் வினாயர் கோவிலில் இருந்து, வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு சென்ற ஊர்வலத்தை, அமைச்சர்கள் வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். ஊர்வலம், அண்ணா சாலை, திருப்பதி தேவஸ்தானம் தகவல் மையம் வழியாக, வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு சென்றது. அங்கு ஜலகண்டேஸ்வரருக்கு, 5001 பால் குடம் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது. பின், 5001 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல், வேலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., மாணவரணி சார்பில், சத்துவாச்சாரி, வள்ளலார் லிங்கேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று சிறப்பு பாலாபிஷேகம், விளக்கு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !