உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதல்வர் ஜெ., நலம்பெற வேண்டி ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு

முதல்வர் ஜெ., நலம்பெற வேண்டி ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் ஒன்றிய அ.தி.மு.க.‚ சார்பில்‚ முதல்வர் ஜெ.‚உடல்நலம் பெறவேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. திருக்கோவிலுார் கிழக்கு வீதி ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த வழிபாடு நிகழ்ச்சியில், ஒன்றிய அ.தி.மு.க.‚ செயலா ளர் பழனி வரவேற்றார். மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். எம்.பி.‚ காமராஜ்‚ தொழில் அதிபர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம்‚ முத்தங்கி சேவை‚ புஷ்பாஞ்சலி‚ சகஸ்ர நாமார்ச்சனையை பட்டாச்சாரியர்கள் செய்தனர். பாசறை மாவட்ட செயலாளர் சந்தோஷ்‚ முகையூர் ஒன்றிய செயலாளர் கோதண்டராமன்‚ மணம்பூண்டி ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி‚ முன்னாள் மாவட்ட செயலாளர் கதிர்தண்டபாணி‚ முன்னாள் ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி‚ பார்த்தசாரதி‚ வழக்கறிஞர் உமாசங்கர்‚ முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஏசுபாதம், பேரூராட்சி கவுன்சிலர் சம்பத்‚ ஜெயபால்‚ ரவி‚ ஜெகன்‚ நிர்வாகிகள் பாலமுரளி‚ அருணகிரி‚ ஷபி‚ ராணி‚ தகவல் தொழில்நுட்ப பிரிவு பாலாஜி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !