உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லபுள்ளி அம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா

நல்லபுள்ளி அம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா

சங்ககிரி: மோரூர் நல்லபுள்ளி அம்மன் கோவிலில், நாளை மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி, கோவிலை சுற்றிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சங்ககிரி அருகே, மோரூரில், பழமையான நல்லபுள்ளி அம்மன் கோவில் உள்ளது. அங்கு, விநாயகர், நல்லபுள்ளி அம்மன், புஜங்கேசுவரர், பார்வதி அம்மன், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், ஸ்ரீதேவி, பூதேவி, சென்றாய பெருமாள், பட்டத்தரசி அம்மன், மாரியம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு, மஹா கும்பாபிஷேகம், நாளை காலை, 9:30 மணிக்கு மேல், 11:30 மணிக்குள் நடைபெற உள்ளது. இதையொட்டி, நேற்று மாலை, 4:00 மணிக்கு, முதல் கால யாக பூஜை நடந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு, இரண்டாம் கால யாக வேள்வியும், மாலை, 5:00 மணிக்கு, மூன்றாம் கால பூஜையும் நடக்கிறது. நாளை காலை, 5:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜையும், 9:30 மணிக்கு மேல், 11:30 மணிக்குள் கும்பாபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து, தசதரிசனம், தசதானம், மஹா அபிஷேகம், மஹா தீபாராதனை, பிரசாதம், அன்னதானம் ஆகியவை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !