உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீபாவளி, சஷ்டி விழா!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீபாவளி, சஷ்டி விழா!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீபாவளி, கோலாட்ட உற்சவம், வெள்ளி கோ ரதம் புறப்பாடு, கந்த சஷ்டி விழா ஏற்பாடுகள் நடக்கின்றன. அக்.,26ல் உச்சிகாலத்தில் காலை 10:00 மணிக்கு மூலஸ்தான மீனாட்சி அம்மனுக்கும், உற்சவர் அம்பாளுக்கும் ஏத்தி இறக்குதல் சடங்கு நடந்து தீபாராதனை நடக்கும்.

தீபாவளி வழிபாடு: அக்.,29 காலை, மாலையில் அம்மனுக்கு வைரக்கிரீடம், தங்க கவசமும், சுவாமிக்கு வைர நெற்றிப்பட்டையும் சாத்துப்படி செய்யப்பட்டு தீபாவளி சிறப்பு தரிசனம் செய்விக்கப்படும்.கோலாட்ட உற்சவம் அக்.,31 முதல் நவ.,6 வரை நடக்கிறது. அக்.,31 முதல் நவ.,3 வரை மாலை 6:00 மணிக்கு அம்மன் எழுந்தருளி ஆடி வீதியில் சுற்றி வந்த பின் மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் பத்தியுலாத்தி பின் கொலுச்சாவடி சேத்தியாகும்.வெள்ளி கோ ரதம்: நவ.,4ல் மாலை 6:00 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி ஆடி வீதியில் புறப்பாடு நடக்கும். அக்.,31 முதல் நவ.,6 வரை கந்த சஷ்டி விழா நடக்கிறது. நவ.,6ல் காலை 7:00 மணிக்கு கூடல்குமாரருக்கு (முத்துக்குமார சுவாமி) வெள்ளிக்கவசம் (பாவாடை) சாத்துப்படியும், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சண்முகார்ச்சனையும் நடக்கிறது.நவ.,14ல் உச்சிக்காலத்தில் சொக்கலிங்கப் பெருமானுக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது.விழாக்களை முன்னிட்டு அக்.,29, அக்.,31, முதல் நவ.,6 வரை உபயதாரர்கள் சார்பாக உபய திருக்கல்யாணம் தங்க ரதம் உலா ஆகிய சேவைகள் நடக்காது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !