உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் ஐப்பசி கிருத்திகை விழா கோலாகலம்!

திருத்தணி முருகன் கோவிலில் ஐப்பசி கிருத்திகை விழா கோலாகலம்!

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த ஐப்பசி மாத கிருத்திகை விழாவில், திரளான பக்தர்கள் மூலவரை வழிபட்டனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலில்,  ஐப்பசி மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு, அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவருக்கு விபூதி, பால், பன்னீர், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை, 10:30 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. கிருத்திகை விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மூலவரை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !