முதல்வர் ஜெ., நலம் பெற வேண்டி பனையபுரத்தில் பால் அபிஷேகம்
விக்கிரவாண்டி: அ.தி.மு.க., சார்பில் முதல்வர் ஜெ., குணமடைய வேண்டி சத்தியாம்பிகைக்கு 108 பால் குட அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தில் விக்கிரவாண்டி ஒன்றிய எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் நடந்த பால்குட அபிஷேகத்திற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் லட்சுமணன் எம்.பி., தலைமை தாங்கினார் . பனையபுரம் செம்படவினாயகர் கோவிலிருந்து புறப்பட்ட 108 பால் குட ஊர்வலம், பனங்காட்டீஸ்வரர் கோவிலை அடைந்து, அங்குள்ள சத்தியாம்பிகைக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடந்தது. அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை நடந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழுப்புரம் எம்.பி., ராஜேந்திரன், மாவட்ட சேர்மன் அலமேலு வேலு, ஒன்றிய எம்.ஜி.ஆர்., இளைஞரணி தலைவர் ஜெயமூர்த்தி, நிர்வாகி தொரவி சுப்பிரமணி, மாநில பொதுக்குழு எசாலம் பன்னீர், ஒன்றிய பேரவை செயலாளர் சரவணக்குமார், துணை செயலாளர் பூங்குணம் சந்திரன், மாவட்ட மாண வரணி செயலாளர் ராமசரவணன், துணை செயலாளர் அற்புத வேல், மாவட்ட கவுன்சிலர் செங்குட்டுவன், ஒன்றிய செயலாளர்கள் வேலு, முத்தமிழ் செல்வன், நிர்வாகிகள் கோபாலகிருஷ் ணன், மாணிக்கவேல், பூங்காவனம், அய்யனார், ஜெயராமன், இலக்கிய அணி திருப்பதி பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.