பிரம்மாண்டமாக உருவாகும் ஐயப்பன் கோவில் கட்டுமானம்
குமாரபாளையம்: குமாரபாளையம் அடுத்த, எம்.ஜி.ஆர்., நகர் பஸ் நிறுத்தம் அருகே கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவில் போல், பல கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்டமான ஐயப்பன் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து, மூத்த ஐயப்ப குருசாமி ஈஸ்வர குருசாமி கூறியதாவது: இந்த ஐயப்பன் கோவில் முழுக்க, சாஸ்திர முறைப்படி, சபரிமலையில் உள்ளது போல் உருவாக்கப்பட்டு வருகிறது. மூலவர் ஐயப்பன். இவரை தவிர கன்னி மூல கணபதி, நாகராஜன், பாலமுருகன், மஞ்சமாதா, ஆஞ்சநேயர், ராமர், நவக்கிரகங்கள், காலபைரவர், கருப்பண்ண சுவாமி, கடுத்த சுவாமி ஆகிய சுவாமிகளுக்கும் சன்னிதானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சிறப்பம்சமாக, 18 படிகள், மணி மண்டபம், தியான மண்டபம், பக்தர்களுக்கு பஜனை மண்டபம், அன்னதான மண்டபம், மடப்பள்ளி, உற்சவர் சிலைகள் வைக்கும் அறை உள்பட யாவும் அமைக்கப்பட்டு வருகின்றன. பணிகள் முழுமை பெற்றதும், விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.