வல்லப விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
வில்லியனுார்: வில்லியனுார் ஆச்சார்யாபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வல்லப விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. வில்லியனுார் ஆச்சார்யாபுரம் அன்பு நகரில் அமைந்துள்ள வல்லப விநாயகர் பரிவார தெய்வங்களான கெங்கை முத்து அம்மன் மற்றும் நவ கிரகங்களுடன் புதியதாக கட்டப்பட்டுள்ள கோவில் கும்பாபிஷேகம் இன்று (௧௯ம் தேதி) நடக்கிறது.அதையொட்டி, ௧௭ம் தேதி காலை 9:00 மணியளவில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது. நேற்று காலை 8:30 மணியளவில் புதிய விக்ரகங்களுடன் கரிகோல விழா, அதனை தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜை நடந்தது.இன்று (19ம் தேதி) காலை 6:30 மணியளவில் நான்காம் கால யாக பூஜையும், 8:30 பூர்ணாஹீதி, யாத்ரா தானமும் நடக்கிறது.காலை 9:30 மணிக்கு மகா கும்பாபிஷேகமும், 9:45 மணிக்கு மூலவருக்கு கும்பாபிஷேகமும், இரவு சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை வில்லியனுார் ஆச்சார்யா புரம், அன்பு நகர் பகுதி மக்கள் செய்துவருகின்றனர்.