ஐப்பசி கிருத்திகை: முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
ஆர்.கே.பேட்டை: மலைக்கோவில்களில், நேற்று, ஐப்பசி கிருத்திகையை ஒட்டி, முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், உற்சவங்கள் கோலாகலமாக நடந்தன. ஆர்.கே.பேட்டை அடுத்த, அத்திமாஞ்சேரி, நெல்லிக்குன்றம் மற்றும் கஜகிரி செங்கல்வராய சுவாமி மலைக்கோவில்களில், நேற்று காலை, ஐப்பசி கிருத்திகையை ஒட்டி, சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பொதட்டூர்பேட்டை, அத்திமாஞ்சேரிபேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் ஆந்திர மாநிலம் நகரி, சத்திரவாடா, சிந்தல பட்டடை, நாராயணவனம் உள்ளிட்ட பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்தனர். பகல் 12:00 மணிக்கு, சிறப்பு மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு, நெல்லிக்குன்றம் வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி, மலர் அலங்காரத்தில் உள் புறப்பாடு எழுந்தருளினார். இதே போல், பொதட்டூர்பேட்டை, அம்மையார்குப்பம் சுப்ரமணிய சுவாமி கோவில்களிலும், நேற்று, சிறப்பு வழிபாடு நடந்தது.