தர்மபுரி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
ADDED :3542 days ago
தர்மபுரி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி எஸ்.வி., ரோட்டில் உள்ள சாலைவிநாயகர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் விநாயகர் வெள்ளி கவசத்தில், ரூபாய் நோட்டு மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், தர்மபுரி நெசவாளர் நகர் சக்தி விநாயகர், வேல்முருகன் கோவில் சக்தி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மேலும், வெண்ணாம்பட்டி குபேர கணபதி, காரிமங்கலம் ராஜகணபதி, பாலக்கோடு ஞானபிள்ளையார், தொழில்மையம் கணபதி கோவில் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில், நேற்று சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.