உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வழக்கறுத்தீஸ்வரர் கோவில்: தை மாதத்தில் குடமுழுக்கு?

வழக்கறுத்தீஸ்வரர் கோவில்: தை மாதத்தில் குடமுழுக்கு?

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் திருப்பணி இன்னும் நிறைவு பெறாததால், குடமுழுக்கு தை மாதம் தான் நடைபெறும் என, கூறப்படுகிறது. இந்த கோவிலில் வழிபட்டால், வழக்குகளை சுமுகமாக தீர்க்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது. கோவில் குடமுழுக்கு, 10 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. போதிய வருவாய் இல்லாத காரணத்தால், பிரம்மோற்சவம், 50 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறவில்லை. கடந்த, 2014 நவம்பரில், கோவில் திருப்பணி துவங்கியது; பணிகள் இன்னமும் நடந்து வருகின்றன. இன்னும் இரண்டு மாதங்களில் முடிந்து விடும் என, கூறப்படுகிறது. அதன்பிறகு குட முழுக்கு நடைபெறும் என கூறப்படுகிறது. ராஜகோபுரம் வேலை முடிந்து விட்டது. அதில் படிகள் மட்டும் தான் பாக்கி. கொடி மரம் எடுக்க சென்று விட்டனர். இன்னும் சிறு சிறு வேலைகள் இருக்கின்றன. தை மாதம் இறுதியில் குடமுழுக்கு செய்ய, ஆணையர் பார்வையிட்டு, குடமுழுக்கிற்கான தேதியை அறிவிப்பார். கோவில் அதிகாரி ஒருவர், காஞ்சிபுரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !