உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி முத்தாலம்மன் கோயிலுக்கு அ.தி.மு.க., வினர் பால்குடம்

பரமக்குடி முத்தாலம்மன் கோயிலுக்கு அ.தி.மு.க., வினர் பால்குடம்

பரமக்குடி:  முதல்வர் ஜெ., நலம்பெற வேண்டி பரமக்குடி முத்தாலம்மன் கோயிலுக்கு அ.தி.மு.க., வினர் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். மாநில மகளிரணி துணை செயலாளர் கீர்த்திகா, மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் சுப்பிரமணியன், ஜெ., பேரவை நகர் செயலாளர் வடமலையான், முன்னாள் அமைச்சர் சுந்தரராஜ், எம்.எல்.ஏ., முத்தையா உள்பட அ.தி.மு.க., வினர் ஏராளமானபேர் கலந்து கொண்டனர். பரமக்குடி வைகை ஆற்று படித்துறையில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலம் தரைப்பாலம், சந்தைக்கடை, பஸ் ஸ்டாண்ட், ஐந்துமுனை ரோடு, ஆற்றுப்பாலம் வழியாக கோயிலை அடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சந்தனம், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர், பால் ஆகியவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !