கண்டாச்சிபுரத்தில் தன்வந்திரி யாகம்
ADDED :3314 days ago
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் சக்திவேல்முருகன் கோவிலில், முதல் வர் உடல் நலம் பெறவேண்டி, தன்வந்திரி யாகம் நடந்தது.
கண்டாச்சிபுரம் எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கோதண்டராமன், பழனிசாமி, மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் தங்கராஜ், இளங்கோவன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் துரைராஜ் முன்னிலை வகித்தனர். பேரவை ஒன்றிய செயலாளர் பாலமுரளி, சேகர், நகர செயலாளர் செந்தில், முன்னாள் நகர செயலாளர் ஆறுமுகம், பாலு, நகர இளைஞரணி ரமேஷ், ஒன்றிய பொருளாளர் கலியமூர்த்தி, உமாசங்கர், பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் தனபால்ராஜ் செய்தார்.