வாசலில் கோலமிட்டு அதில் மஞ்சள் குங்குமம் வைப்பது சரிதானா?
ADDED :3308 days ago
தவறு. மாவினால் கோலமிடுவது மங்களத்தை உண்டாக்கும். எறும்பு, குருவி போன்ற உயிர்களுக்கு உணவாகவும் ஆகிறது. இது ஒரு புண்ணிய செயலும் கூட. மஞ்சள், குங்குமம் ஆகியவை பூஜைக்குரியவை. இவற்றை காலில் படும் படியாக கோலத்தில் வைக்கக் கூடாது. அரிசி மாவினால் தான் கோலமிட வேண்டும். அலங்காரத்திற்காக சிலர் கல் மாவை உபயோகிப்பதும் தவறு.