வேதபுரீஸ்வரர் கோவில் பூஜைக்கு ரூ. 2 லட்சம் நிதி
ADDED :3305 days ago
திருவண்ணாமலை: செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவிலில், தினசரி நித்ய சாயரட்சை பூஜைக்காக, லட்ச தீப அறக்கட்டளை விழாக்குழுவினர், 2 லட்சம் ரூபாய் வைப்பு நிதி வழங்கினர். திருவண்ணாமை மாவட்டம், செய்யாறு நகரில் பிரசித்தி பெற்ற பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் லட்ச தீப அறக்கட்டளை விழாக்குழு சார்பில், லட்ச தீப விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடதப்பட்டு வருகிறது. தற்போது கோவிலில் தினசரி நித்ய சாய ரட்சை பூஜைக்கு, இரண்டு லட்சம் ரூபாய் வைப்பு நிதியை, லட்ச தீப அறக்கட்டளை விழாக்குழு தலைவர் குரு வீரமணி மற்றும் நிர்வாகிகள் கோவில் செயல் அலுவலர் உமேஷ் குமாரிடம் நேற்று முன்தினம் வழங்கினர்.