உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவ சுப்ரமண்ய சுவாமி கோவிலில் 30ல் கந்த சஷ்டி விழா துவக்கம்

சிவ சுப்ரமண்ய சுவாமி கோவிலில் 30ல் கந்த சஷ்டி விழா துவக்கம்

சிவாஜி நகர்: பெங்களூரு, காமராஜர் சாலை, வள்ளி தேவசேனா சமேத ஷடாக்ஷர ஞான சிவ சுப்ரமண்ய சுவாமி கோவிலில், வரும், 3 முதல், நவம்பர், 8 வரை மகா கந்த சஷ்டி விழா நடக்கிறது.காமராஜர் சாலை, வள்ளி தேவசேனா சமேத ஷடாக்ஷர ஞான சிவ சுப்ரமண்ய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.வரும், 30, காலையில் கோதரகவுரி கலச ஸ்தாபனம், இரவில் மகாகணபதி உற்சவம்; 31ம் தேதி மாலையில் சிவ சுப்ரமண்யர் உற்சவம் நடைபெறும்.நவ., 1ம் தேதி, மாலையில் நாக வாகன உற்சவம்; 2ம் தேதி, மாலையில் மயூர வாகன உற்சவம்; 3ம் தேதி, மாலையில் விஸ்வரூபம் உற்சவம்; 4ம் தேதி மாலையில் பராசக்தி வேல் பூஜை, இரவில் சுப்ரமண்யர் வேல் வாங்குதல் நடைபெறும். வரும், 5ம் தேதி காலையில் சண்முகர் மகா அபிஷேகம், மதியம் தீபாராதனை; மாலை, 6:30 மணிக்கு சூரசம்ஹாரம்; 6ம் தேதி மாலையில் தெய்வானை கல்யாணம்; 7ம் தேதி மாலையில், வள்ளி கல்யாணம்; 8ம் தேதி காலையில் பிராயசித்த அபிஷேகம், விடாயாற்றி உற்சவம், பக்தோத்சவம், பகலில் தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !