ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடல்
ADDED :3368 days ago
ராமேஸ்வரம்: தீபாவாளி பண்டிகை, ஐப்பசி அமாவாசை என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நேற்று ராமேஸ்வரத்தில் குவிந்தனர். அக்னி தீர்த்த கடலில் நீராடிய பின், கடற்கரையில் அமர்ந்து முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய புரோகிதர்கள் மூலம் திதி பூஜை செய்தனர். தொடர்ந்து கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடிவிட்டு அம்மன் சன்னதிகளில் சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.