உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வண்ண விளங்குகளால் ஜொலித்த தங்க கோவில்!

வண்ண விளங்குகளால் ஜொலித்த தங்க கோவில்!

வேலூர்: தீபாவளியை முன்னிட்டு, வண்ண விளக்குகளால் ஜொலித்த தங்க கோவிலை, ஏராளமானோர் கண்டு ரசித்தனர். வேலூர் அருகே, ஸ்ரீபுரத்தில் தங்க கோவில் உள்ளது. திருமலைக்கோடி நாராயணி பீடம் சக்தி அம்மா, இந்த கோவிலை அமைத்தார். தீபாவளி விடுமுறையால், கடந்த, 28 முதல் நேற்று வரை, தங்கக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. மூன்று நாட்களில், மூன்று லட்சம் பக்தர்கள் தங்க கோவிலை பார்த்து சென்றுள்ளதாக, கோவில் இயக்குனர் சுரேஷ்பாபு கூறினார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தங்க கோவிலின், 24 ஆயிரம் சதுரடி பகுதி முழுவதும், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. இரவில் இதை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !