தேவசேனை - முருகனுக்கு 6ல் திருக்கல்யாண உற்சவம்
ADDED :3300 days ago
திருவள்ளூர்; திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவில், பூங்காநகரில் அமைந்துள்ள சிவ-விஷ்ணு கோவில், ஜெயா நகர் விஸ்தரிப்பில் உள்ள மகாவல்லப கணபதி கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் கந்த சஷ்டி விழா துவங்கியது. வள்ளி தேவசேனை சமேத சுப்ரமணியருக்கு, நேற்று காலை அபிஷேகமும், மாலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.வரும் 5ம் தேதி வரை, தினமும் காலை அபிஷேகமும், மாலை சிறப்பு அலங்காரம் நடைபெறும். அன்று மாலை, சூரசம்ஹாரமும், மறுநாள் 6ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். சிவ - விஷ்ணு கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நிறைவடைந்ததும், மாலை 3:00 மணியளவில் புதிய தங்கமயில் வாகனத்தில் வீதிஉலா நடைபெறும்.