உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கிரிவலப்பாதை சீரமைக்க பக்தர்கள் வேண்டுகோள்

திருப்போரூர் கிரிவலப்பாதை சீரமைக்க பக்தர்கள் வேண்டுகோள்

திருப்போரூர்: திருப்போரூரில், சிதிலமடைந்து காணப்படும் கிரிவலப் பாதையை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.திருப்போரூர், கந்தசுவாமி கோவிலுக்கு மேற்கே அமைந்துள்ள பிரணவ மலையில், பழமை வாய்ந்த பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில், பிரதோஷ விழாவும், பவுர்ணமி கிரிவலமும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், மலைக்கோவிலின் மேற்கு பகுதியில் உள்ள கிரிவலப்பாதை பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், இப்பகுதியில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர். தாறுமாறான சாலையால், பக்தர்களுக்கும், குடியிருப்பு வாசிகளுக்கும் ஏற்படும் சிரமம் தான் பள்ளி மாணவர்களுக்கும் ஏற்படுகிறது. இச்சாலை சீரமைக்கப்பட்டால், விஷேச நாட்களில் நகர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, மாற்றுப்பாதையாக அமையும். எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர், இப்பகுதி கிரிவலப்பாதையை ஆய்வு செய்து, தரமான சாலையை விரைவில் ஏற்படுத்த வேண்டுமென பக்தர்களும், பகுதிவாசிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !